ஜல்லிக்கட்டு வழக்கு :உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு…!
ஜல்லிக்கட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளது.