உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் _ பிவாணி இடையே பயணிகள் இரயிலான கலிந்தி விரைவு ரயில் வழக்கமாக புறப்பட்டு செல்லும். கான்பூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பராஜ்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது ரயிலின் பொதுப்பிரிவு கழிப்பறை பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். மேலும் அனைத்து பெட்டிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் இந்தியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது.அந்த கடிதத்தில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு 7 மணிக்கு நடைபெற்ற தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…