ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கெஞ்சிய சிறை கைதிகள்…!
புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆய்வுசெய்த ஆளுநர் தமிழிசை காலில் விழுந்து கெஞ்சிய கைதிகள்.
புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சிறை கைதிகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் சிறையில் இருப்பதாகவும், விடுதலை செய்யுங்கள் எனக் கூறியும் காலில் விழுந்து கெஞ்சி உள்ளனர்.
இதனையடுத்து ஆளுநர் தமிழிசை, கோரிக்கையை ஆலோசிப்பதாக உறுதி கொடுத்தார். தமிழிசை காலில் விழுந்த கைதிகளை போலீசார் தூக்கி விட்டனர்.