‘ஜெய் ஸ்ரீ ராம்’- பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் அடிக்கப்பட்ட பேனர்!
நகராட்சி அலுவலகத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகைப்படம் அடங்கிய பேனரில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகம் மலையாளத்தில் பதிக்கப்பட்டு இருந்தது.
கேரளாவில் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சில இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. குறிப்பாக பாலக்காடு நகராட்சியை பாஜக தக்கவைத்தது. கடந்த 16ஆம் தேதி நகர் ஆட்சியைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில், பாலக்காடு நகராட்சி கட்டிடத்தில் பாஜகவினர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை கட்டிடத்தில் ஒருபுறம் வைத்தனர். அதனை தொடர்ந்து மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகைப்படம் அடங்கிய மற்றொரு பேனரில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகம் மலையாளத்தில் பதிக்கப்பட்டு இருந்தது.
சிலர் கட்டிடத்தின் உச்சியில் நின்றுகொண்டு, பாஜக கொடியை அசைத்த வண்ணம் இருந்தன. இந்த சம்பவம் நகராட்சி கட்டிடத்திலிருந்து சிலரால் வீடியோவாக எடுக்கப்பட்ட நிலையில், இது இணையத்தில் வைரலானது. அரசு கட்டிடத்தில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த இரண்டு பேர்களும் உடனடியாக நீக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் அணியாக செயல்பட்டு வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று பாலக்காடு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பாஜக பேனர் வைத்திருந்த அதே பகுதியில், இந்திய தேசியக்கொடியை தேசியக்கொடி பறக்க விட்டனர். ‘இது ஒன்றும் ஆர்எஸ்எஸ் அலுவலகம் அல்ல. நகராட்சி அலுவலகம், இது ஒன்றும் குஜராத் அல்ல கேரளா’ என்ற வாசகம் அடங்கிய பேனருடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டகால், நகராட்சி அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.