2014-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுவதை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மீது ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக பல பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சண்டாவுளி மாவட்டத்தில் முகமது காலித் என்ற 15 வயது சிறுவன் தீக்காயங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அந்த சிறுவன் இறப்பதற்கு முன்பு நான்கு நபர்கள் என்னை கடத்தி சென்று ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கூறினர் ஆனால் நான் கூற மறுத்ததால் என்னை தாக்கினர் என்று காவல்துறையினருக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சிங் உயிரிழந்த சிறுவன் இரண்டு விதமாக பேசுவதாக கூறியுள்ளார்.
முதலில் அந்த சிறுவன் மஹாராஜ்பூர் கிராமத்தில் தன்னைக் கடத்திச் சென்றதாகவும் பின்னர் ஹடீஜா கிராமத்தில் தன்னை கடத்திச் சென்றதாகவும் கூறியதாக கூறியுள்ளார்.இதை பார்க்கும் போது அந்த சிறுவனுக்கு யாரோ சொல்லி கொடுத்து பேசுவது போல உள்ளது என்று கூறியுள்ளார்.
பின்னர் அந்த சிறுவன் கூறிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்க்கும் போது அந்த சிறுவன் அங்கு இல்லாததாகவும் அதை பார்த்தவர்களோ அந்த சிறுவன் தன்னை தானே தீவைத்து கொண்டதாக கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…