பீகாரில் மூன்று முறை முதல்வராக இருந்த ஜெகநாத் மிஸ்ரா மரணம்!

பிஹாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்றவர் ஜெகநாத் மிஸ்ரா, இவர் பீகாரில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் ஏப்ரல் 1975 முதல் ஏப்ரல் 1977 வரையிலும், ஜூன் 1980 முதல் ஆகஸ்ட் 1083 வரையிலும், கடைசியாக டிசம்பர் 1989 முதல் மார்ச் 1990 வரையிலும் என மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் அதற்கடுத்து சில கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அண்மைகாலமாக உடல் நலக்குறைவால் இவர் பாதிக்கப்பட்டு உயிழந்தார். இவருக்கு வயது 82 ஆகிறது.
இவருடைய மறைவிற்காக 3 நாள் துக்கநாளாக அனுசரிக்கப்படுவதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025