ஆந்திர மாநில முதலமைச்சரும் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி வழக்குப் பதிவு சிபிஐ செய்தது.பின்னர் 2012 -ம் ஆண்டு மே மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்தனர்.இதையடுத்து 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதலமைச்சராக கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றார்.
அதனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கைக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் “குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் , எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அனைவரும் சாதாரண மனிதர்தான்.அதனால் ஜெகன் மோகன் ரெட்டி வருகின்ற 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என சிபிஐ நீதிமன்றம் உத்திரவிட்டது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
பலரும் விரும்பி சாப்பிட்டு வரும் சீதாப்பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :…
சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.…
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில்…
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…