ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

- ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- நடைமுறையில் உள்ள தளர்வில் எந்த மாற்றமுமில்லை.
- புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15,000 க்கும் கீழாக சென்றுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .தற்போதைய நடைமுறையில் உள்ள தளர்வு, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.திங்களன்று நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இது குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எந்த மாவட்டத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகளவில் பதிவானால் ஜூன் 1 முதல் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு நேரம் குறைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15,000 க்கும் கீழாக சென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,400 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்த்தானம் ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தில் ஆனந்தய்யா வழங்கும் லேகியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.லேகியத்தை மட்டும் வழங்கலாம் என்றும் கண்ணில் விடப்படும் சொட்டு மருந்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025