ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர் மரணம்.! மேலும் 4 பேர் கைது..!
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மேலும் 4 பேரை கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் முஹம்மது ஆசிப், முகமது ஆரிப், அங்கன் சர்தார் மற்றும் அசித் சர்தார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.