பணிக்காலத்தின் கடைசி நாள்.! அலுவலகத்தில் உறங்கி சென்ற ஐபிஎஸ் அதிகாரி.!

Default Image

35 ஆண்டுகளாக கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த  ஜாகோப் தாமஸ், கடைசி பணி நாளில் தனது அலுவலக அறையில் படுத்துறங்கியுள்ளார். 

கேரளாவில் கடந்த 35 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த  ஜாகோப் தாமஸ் அவர்கள் நேற்று முன்தினத்துடன் தனது கடைசி பணிக்காலத்தை நிறைவுசெய்துள்ளார். இவர் கடந்த 1985-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.

கேரளாவில் லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்பு துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றி அவர் கடைசியாக அரசின் உலோக கருவிகள் தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான மெட்டல் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனராக பதவியில் இருந்து வந்துள்ளார். ஜாகோப் தாமஸ் நேற்று முந்தினத்துடன் ஓய்வு பெற்றார்.

இது குறித்து, அவர் தனது இணையதள பக்கத்தில் பதிவிடுகையில், ‘ இதுவே எனது கடைசி பணி நாள். நான் எனது அலுவலகத்தில் உறங்குகிறேன்’ எனவும், எனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை பரசுராமரின் கோடரியால் தொடங்க உள்ளேன்.’ எனவும் பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்