ஜபால்பூர் பெண்ணின் 28 ஆண்டுகால விரதம் முடிவுக்கு வந்தது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் விஜய் நகர் பகுதியில் வசித்து வருபவர், ஊர்மிளா சதுர்வேதி. 1992-ம் ஆண்டு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டமைப்பு வீழ்த்தப்பட்டு, நாட்டில் கலவரம் ஏற்பட்டது. அப்போது, இந்த பெண் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கும் வரை, நான் பாலும், பழமும் தான் சாப்பிடுவேன் என சபதம் விடுத்திருந்தார்.
அதன் பின் இவர், ராமாயணத்தை ஓதுவதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கோயிலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதையடுத்து, தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வாழ்த்தி அவர் கடிதங்களை அனுப்பினார்.
இவர், இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிய போது அவருக்கு வயது 52. அவரது உறவினர்கள் இந்த உண்ணாவிரதத்தை முறிக்கும்படி பல முறை கேட்டுக் கொண்ட போதும், அவர் அதை முடிக்காமல் பிடிவாதமாக இருந்து வந்தார்.
தற்போது இதுகுறித்து அவர் கூறுகையில், 28 வருட உண்ணாவிரதத்திற்கு பிறகு பகவான் ராமரின் ஆசீர்வாதங்களை பெற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், ராமரிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னரே அயோத்தி சென்று உணவு எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை அயோத்திக்கு அழைத்துச் செல்லவும், விரைவில் சரயு ஆற்றின் கரையில் விரதத்தை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்காக ஆகஸ்ட் 5 ஆம் தேதியை ராம் ஜன்ம பூமி அறக்கட்டளை இறுதி செய்துள்ள நிலையில், இந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்ளலாம் என இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இவரது திட்டம் சீர்குலைந்தது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…