ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜன.7 வெளியீடு.!

ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வருகின்ற 7ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு நடைபெற உள்ளது.
அதன்படி, வரும் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவே இந்த தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில், ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வருகின்ற 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
My dear students,
I will announce the eligibility criteria for admission in #IITs & the date of #JEE Advanced on 7th Jan at 6 PM.
Stay tuned! pic.twitter.com/PHvDj2xzd5— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) January 4, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025