குடியரசு தினத்தை கொண்டாடும் முறை இது தான்!
- குடியரசு தினத்தை கொண்டாடும் முறை இது தான்.
- ஒற்றுமையுடன் நாம் இந்தியர் என்று பெருமையுடன் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமானது ஜன.26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தேசிய கோடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் அணைத்து பொது மக்கள், தலைவர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருமே கலந்து கோலாவதுண்டு.
கொண்டாடப்படும் முறை:
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் முதலில் டெல்லியில் பிரதமர் மூவண்ண இந்திய கொடியினை கம்பத்தில் பறக்கவிடுவார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல தலைவர்கள் இந்திய கொடியினை ஏற்றி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதுண்டு.
இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்கள், இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களையும் நினைவில் கொண்டு, கொடியை ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், கொடியினை தங்களது ஆடையில் குத்திக்கொள்வர்.
இன்று இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்திருப்பதற்கு காரணம், இதற்கு பின் பல தலைவர்களின் உயிர்த்தியாகம் மற்றும் பல மக்களின் ரத்தமும் உள்ளது. எனவே வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையுடன் நாம் இந்தியர் என்று பெருமையுடன் சொல்ல வேண்டும்.