“இது மேற்கு வங்க மக்களின் நீதிக்கான போராட்டம்” – பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால்..!
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாபனிபூர் இடைத்தேர்தலில் தான் போட்டியிவது,மேற்கு வங்காள மக்களின் நீதிக்கான போராட்டம் என்று மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாபனிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா பானெர்ஜி பாபனிபூரில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில்,பாபனிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் இன்று வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து,ஏஎன்ஐ செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“இது அநீதிக்கு எதிரான போராட்டம். இது மேற்கு வங்க மக்களின் நீதிக்கான போராட்டம் ஆகும். பாபனிபூரின் மக்கள் அவர்கள் ஒரு பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர், அவர்கள் முன்னோக்கி வந்து வரலாற்றை உருவாக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
This is a fight against injustice. This is a fight for justice, for the people of West Bengal. I would like to tell the people of Bhabanipur that they’ve received a big opportunity, they should come forward and make history: Priyanka Tibrewal, BJP candidate for Bhabanipur bypolls pic.twitter.com/NHUxfulnZR
— ANI (@ANI) September 13, 2021