கொரோனாவை விட என் தலைக்கு மேல் சுற்றும் விசிறியை பார்த்தால் தான் பயமாக உள்ளது – நோயாளி வெளியிட்ட வீடியோ!

தனது தலைக்கு மேலே சுற்றும் மருத்துவமனையில் உள்ள மின்வசிறி மிகப் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவது போல உள்ளதாக நோயாளி ஒருவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் ஒரு நாளுக்கு நாள் புதிதாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை அனுமதிப்பதற்கு மருத்துவர்கள் திணறுகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த இளைஞர் இருக்கக்கூடிய படுக்கைக்கு மேலே சுற்ற கூடிய மின் விசிறி வித்தியாசமாக சற்று பயமுறுத்தும் வகையில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ள அந்த இளைஞர், எனக்கு இப்பொழுது கொரோனா வைரஸ் கண்டு கூட பயம் இல்லை. ஆனால், என் தலைக்கு மேல் இருக்கக் கூடிய மின் விசிறியை பார்த்தால் தான் பயமாக உள்ளது என பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
Corona se darr nahi lagta sahib, fan se lagta hai… pic.twitter.com/f1R7GAdwh2
— Abhimanyu Kulkarni (@SansaniPatrakar) April 25, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025