இது அதுக்கும் மேல.! திருமணம் செய்வதாக கூறி பிரபல ரவுடியை கைது செய்த பெண் சப் இன்ஸ்பெக்டர்..!

Default Image

தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை திருமண செய்வதாக கூறி புத்திசாலிதனமான கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்ட்டர்.
உத்திரபிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள பிஜோரி கிராமத்தை சேர்ந்து பால்கிஷன் சவுபே என்பவரின் மீது கொலை மற்றும் கொள்ளை போன்ற 16 வழக்குகள் போடப்பட்டுள்ளதால், போலீசிடம் பிடி படாமல் தப்பித்து வந்துகொண்டிருந்தார். இதனால் அவரை பற்றி தகவல் சொல்லுபவருக்கு காவல்துறை சார்பாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பால்கிஷன் சவுபே ரவுடியின் போன் நம்பரை கண்டுபிடித்த போலீஸ் போன் பண்ணா ஸ்விட்ச்ஆஃ செய்துவிடுவார் என்று தெரிந்து வித்தியாசமான வழியில் பிடிக்க முடிவு எடுக்கப்பட்டது. பால்கிஷனுக்கு பெண் பார்க்கும் வேலை நடைபெற்று வந்ததால் அதை அறிந்த போலீசார் பெண் ஊழியர் ஐடியை வைத்து ஒரு சிம் கார்டு வாங்கப்பட்டது. அந்த நம்பரிலிருந்து பெண் ஊழியர் பால்கிஷனுக்கு போன் செய்தார். அந்த பெண் தான் சப் இன்ஸ்பெக்ட்டர்,போன் எடுத்த ரவுடி சாரி ராங் நம்பர் என்று சொல்லி வைத்துவிட்டார்.
இதை அறிந்த பால்கிஷன் அந்த நம்பரை எடுத்து ஆப் மூலம் தேடிப்பார்த்த போது அது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் நம்பர் என்று தெரிந்து நிம்மதி அடைந்தார்.
பிறகு சில நாட்கள் அடுத்து மறுபடியும் இன்ஸ்பெக்டர் போன் செய்தார்,அட்டன் பண்ணி பேசிய பால்கிஷனின் நட்பு தொடர்ந்தது. பின்னர் உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என கூறினார் பெண் போலீஸ் அதற்கு அவர் முதலில் நேரில் சந்திப்போம் என்று சொன்னார். பின்பு பிஜோரில் உள்ள கோவிலில் பார்க்கலாம் என்று சொல்லிருந்தார்கள்.
ஆவலாக இருந்த பால்கிஷன். அங்கு ஏற்கனவே மப்டியில் போலீஸ் ஆங்காங்கே இருந்தார்கள். பெண் இன்ஸ்பெக்டர் அங்கு வரவில்லை அதனால் அந்த நம்பருக்கு போன் செய்த பால்கிஷனை போலீசார் இந்த நம்பருக்குத்தானே போன் பண்றிங்கனு என்று கேட்டு மடக்கி பிடித்து சிறையில் தள்ளினார். இதனால் வித்தியாசமான முறையில் பிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்