இனிமே இது தான் நிலைமை போல! காசு கொடுத்து காற்றை சுவாசிக்கும் மக்கள் கூட்டம்!

சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக ஆக்சி பியூர் என்ற ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ட்யூப் வழியே சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்கலாம். இந்த மையத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என விதவிதமான வாசனையுடன் தயார் செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன்கள் உள்ளது.
இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்டதை தேர்வு செய்து சுவாசித்து கொள்ளலாம். நேரத்தின் அடிப்படையில், கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலும், கேன்களிலும், ஆக்சிஜன் அடைக்கப்பட்டு, இந்த மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், மக்கள் இந்த மையத்தில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.