நியூயார்க் பள்ளிகளில் பொது விடுமுறை யாகிறது! தீபாவளி.!
தீபாவளி பண்டிகைக்கு பள்ளிக்கு 2023ஆம் ஆண்டிலிருந்து விடுமுறை விடப்போவதாக நியூ யார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் ராஜ்குமார் மற்றும் நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் டேவிட் பேங்க்ஸ் ஆகியோருடன் ஆடம்ஸ் இது பற்றி நடந்த உரையாடல்களில் தீபாவளி மற்றும் தீபத் திருவிழா என்பதைப் பற்றி கற்றுக்கொண்டேன் என்று கூறினார்.
அதே நேரத்தில், தீபாவளியை பற்றிக் கற்றுக்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்கப் போகிறோம், தீபத் திருவிழாவைக் கொண்டாடுவது, உங்களுக்குள் ஒளியை எப்படி ஏற்றுவது என்பது பற்றி சிந்திக்க அவர்கள் தொடங்குவார்கள். இது இந்திய-அமெரிக்க சமூகத்தின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.
இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களையும் இந்திய நெறிமுறைகள் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடவும் மற்றும் அனுபவிக்கவும் அனுமதிக்கிறது என்று அவர் கூறினார். நியூயார்க்கில் அரசு அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய-அமெரிக்க பெண்மணி திருமதி. ராஜ்குமார், கூறும்போது தீபத் திருநாளான தீபாவளியைக் கொண்டாடும் 2,00,000க்கும் மேற்பட்ட நியூயார்க் மக்கள் இந்து, பௌத்த, சீக்கிய மற்றும் ஜைன மதங்களைசார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்.
நம்மைச் சுற்றி இருக்கும் பல இருளை அகற்றி ஒளியைத்தேட இந்த தீபாவளி பண்டிகை நமக்கு வழி காட்டும், மேலும் உங்களை எங்களில் ஒன்றாக பார்க்கத்தொடங்கி விட்டோம் என்பதற்கு இது ஒரு அடையாளம் என்று ஆடம்ஸ் கூறினார்.
நியூயார்க் நகர பள்ளி காலண்டரில் தீபாவளி பள்ளி விடுமுறைக்கு, இடமளிக்கும் சட்டத்தை ராஜ்குமார் மாநில தலைநகரில் அறிமுகப்படுத்தினார், இதன் மூலம் 1800 களில் உருவாக்கப்பட்ட “தெளிவற்ற மற்றும் பழமையான” தினமான ஆண்டுவிழா தினத்தை விடுமுறையிலிருந்து சட்டம் நீக்குகிறது.
மேலும் இந்த தீபாவளி விடுமுறை சட்டத்திற்கு ஆடம்ஸ் ஆதரவளித்தார். தீபாவளி பண்டிகை தற்போது நியூயார்க்கிலும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது என்று திருமதி. ராஜ்குமார் மேலும் தெரிவித்தார்.