டெல்லியில் ITBP கான்ஸ்டபிள் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!
ஐ.டி.பி.பி கான்ஸ்டபிள் 22 பட்டாலியன் சங்கம் விஹாரைச் சேர்ந்த சந்தீப் குமார் (31) இவர் நேற்று வழக்கம்போல கரோல் பாக் காவல் நிலையத்திற்கு வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. வேலை முடிந்த மாலை 6:30 மணி அளவில் பின்சந்தீப் குமார் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவர் எடுத்துச் வந்த சர்வீஸ் ரிவால்வரை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
உடனடியாக சந்தீப் குமாரை அங்கு உள்ள லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சந்தீப் குமார் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி ஐ.டி.பி.பி.யில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார்.
சந்தீப் குமாரின் குடும்ப உறுப்பினர்கள் வந்த பின்னரே பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.