அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,ஒரு தீர்க்கமான திருப்புமுனை. தடுப்பூசிகளுக்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது.கடின உழைப்பாளிகளான விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். ஆத்மனிர்பர் பாரதத்தின் கனவை நிறைவேற்ற நமது விஞ்ஞான சமூகத்தின் ஆர்வத்தை இது காட்டுகிறது.
டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், விஞ்ஞானிகள்,போலீஸ் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அனைத்து கொரோனா வீரர்களுக்கும் எங்கள் நன்றியை மீண்டும் வலியுறுத்துகிறோம். பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…