இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் எனக்கூற 48 மணிநேரம் கூட ஆகாது.! ஜெய்ராம் ரமேஷ் பேட்டி.!

Published by
மணிகண்டன்

காங்கிரஸ்: தேர்தல் வெற்றிக்கு பின்னர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க 48 மணிநேரம் கூட ஆகாது – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (ஜூன் 1) உடன் தேர்தல் நிறைவடைய உள்ளது. இதில், NDA கூட்டணியில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளர் யார் என கூட்ட்டணிக்குள் முடிவு எட்டப்படவில்லை. இது குறித்து இன்று PTI செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி அளித்து இருந்தார் அதில் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

ஜெய்ராம் ரமேஷ் பேட்டியில் குறிப்பிடுகையில், மக்களவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் I.N.D.I.A கூட்டணிக்கு இடங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. I.N.D.I.A கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட எங்கள் கூட்டணியில்  சேரலாம். தேர்தல் முடிவுக்கு பின்னர்  I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தேர்வு செய்ய 48 மணிநேரம் கூடா ஆகாது என்று குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு பிறகு NDA கூட்டணிக் கட்சிகளான JD(U) நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போன்றவர்களுக்கு கூட கதவுகள் திறந்தே இருக்குமா என்று கேள்விக்கு நிதீஷ் குமார் பல்டி அடிப்பதில் மன்னர். கட்சி விட்டு கட்சி தாவுவதில் கைதேர்ந்தவர். சந்திரபாபு நாயுடு 2019இல் காங்கிரஸுடன் தான் கூட்டணியில் இருந்தார். இந்த கூட்டணி விவகாரங்கள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி என கட்சி தலைவர்கள் குழு முடிவு செய்யும் என குறிப்பிட்ட்டார். நேர்மை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றைக் கொண்ட கூட்டணி I.N.D.I.A கூட்டணி. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பழிவாங்கும் அரசியல் நோக்குடன் இருக்கிறது என கூறினார்.

செப்டம்பர் 7, 2022 அன்று ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கிய அதே விவேகானந்தர் நினைவிடத்தில், பிரதமர் மோடி இரண்டு நாட்கள் தியானம் செய்யபோகிறார். ஜூன் 4 தேர்தல் முடிவுக்கு பின் ஓய்வு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தியானிக்க உள்ளார் பிரதமர் மோடி என்றும் ,

எங்களுக்கு வெற்றிபெற்ற சீட் எண்ணிக்கையில் உள்ளே வர விரும்பவில்லை, ஆனால், நான் சொல்வது எல்லாம் I.N.D.I.A கூட்டணி பெரும்பான்மை வெற்றியை பெறுவோம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் PTI செய்தி நிறுவனத்துடனான பேட்டியில் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

8 minutes ago
“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!

“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!

டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…

33 minutes ago
LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

2 hours ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

3 hours ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

3 hours ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

4 hours ago