பிரதமர் மோடி: தேர்தல் விதிமுறைகள் பற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அங்கு மிக பெரிய மோசடி நடப்பது தற்போது தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேற்கு வங்கத்தில் பாஜக , மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேர்தல் விதிமுறைகளை மீறி கடுமையாக விமர்சித்து பிரச்சாரம்/விளம்பரங்கள் செய்வதாகவும், அதனால் அத்தகைய விளம்பரங்களை வெளியிட தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு அளித்து இருந்தது.
கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் பாஜக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வருகையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, விளம்பரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சி (திரிணாமுல் காங்கிரஸ்) கடுமையாக விமர்சிக்கப்பட்டதை நாங்கள் காண்கிறோம் என்று கூறி வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோது தான் அங்கு எவ்வளவு பெரிய மோசடி நடக்கிறது என வெளியுலகிற்கு தெரிய வந்தது. என குறிப்பிட்டார்.
மேலும், அதனைவிட துரதிர்ஷ்டம் என்னவென்றால் வாக்கு வங்கி அரசியலுக்காக இப்போது நீதித்துறையையும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எனவும், இந்த நிகழ்வை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார் பிரதமர் மோடி.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…