அது நான் இல்லை..! ஆபாச புகைப்படங்கள் வைரலானதையடுத்து பாஜக எம்எல்ஏ புகார்..!
கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலானதையடுத்து புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள புத்தூர் சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ சஞ்சீவி மத்தந்தூர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் குறித்து சஞ்சீவி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
எம்எல்ஏவின் புகார் :
சஞ்சீவி அளித்த புகாரில், அந்த புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்றும், தனது புகைப்படம் எடிட் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதனை யாரோ எடிட் செய்து வைரலாக்குவதாகவும், இந்த புகைப்படத்தை வைரலாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகவுக்கு பெரும் பின்னடைவு :
தற்போது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகுவதும், பாலியல் புகார் ஆகியவை கர்நாடக பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.