ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி பிணவறையில் இருந்த இளைஞர் சாகவில்லை என்பது 2நாளுக்கு பின்னர் கண்டறியப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ரயில் நிலையத்தில் ஹெலராம் என்பவர் கடந்த வெள்ளியன்று தனது மகன் பிஸ்வஜித்தை கோரமண்டல் ரயிலில் வழியனுப்பியுள்ளார். சில மணி நேரத்தில் ரயில் விபத்துக்குள்ளான செய்தி வெளியாகியுள்ளது.
உடனடியாக தனது உறவினருடன் ஆம்புலன்ஸ் மூலம் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்திற்கு வந்த ஹெலராம், விபத்து நடந்த இடம், மருத்துவமனை எங்கும் தேடியும் அவருடைய மகன் கிடைக்கவில்லை. பின்னர் அங்குள்ள ஊழியர்கள் பிணவறை சென்று பார்க்க கூறியிருக்கிறார்கள்.
கனத்த இதயத்துடன் அங்கு சென்றுள்ளார். முதலில் ஹெலராமை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் ஒருவருக்கு உயிர் இருப்பதாக கூறினர். அது தனது மகன் தான் என நம்பிக்கையுடன் காத்திருந்த ஹெலராமுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்தது. உயிருடன் இருந்தது அவருடைய மகன் பிஸ்வஜித் தான்.
பின்னர் முதல் சிகிச்சை பாலசோர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. அதற்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவர் அனுமதியுடன் மேற்கு வங்க மாநிலத்திற்கு பிஸ்வஜித் கொண்டு செல்லப்பட்டார். இன்னும் முழுதாக நினைவு திரும்பாத பிஸ்வஜித்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிணவறை வரை சென்று திரும்பிய தனது மகன் எப்படியும் பழைய நிலைக்கு வந்து விடுவார் என நம்பிக்கையுடன் பாசமிகு தந்தை ஹெலராம் முயற்சி செய்து வருகிறார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…