இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம் – சௌமியா சுவாமிநாதன்.!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின்னர் அவை சந்தைக்கு வர கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகள் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. சமீபத்தில் மோடி அவர்கள் ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காண்பித்து அனுமதி அளித்ததும் நாடு முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் என்றும், தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட உடன் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசியை மிக குறைந்த நேரத்தில் விநியோகம் செய்வதற்கான அரசாங்கத்தின் சாலை வரைபடம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவை சந்தைக்கு வருவதற்கு கிட்டதட்ட ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவரான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பொதுவாக சந்தைக்கு ஒரு தடுப்பூசி வர 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வருவதால் அதனை விரைவுபடுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசிகள் விரைவில் அதற்கான தயாரிப்பு பணிகளை முடித்தாலும், அதனை சோதனை செய்வதற்கு வெகு நேரம் எடுக்கும் என்றும், எனவே கொரோனா தடுப்பூசிகள் சந்தைக்கு வர கிட்டத்தட்ட ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.