கெஜ்ரிவாலுக்கு செய்தியாளர்களை சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது – பஞ்சாப் முதல்வர்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாபில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 29 ஆம் தேதி பஞ்சாபில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இது குறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு செய்தியாளர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கூட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாபில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கினோம், இப்படி இருக்கையில் எப்படி நாங்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுக்காமல் இருப்போம் எனவும் கேட்டுள்ளார். மேலும் அவர் விரும்பினால் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்வது கூட தங்களுக்கு மகிழ்ச்சி தான் எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025