விவாதிக்கப்படாமல் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது – ராகுல் காந்தி

Published by
லீனா

எந்தவொரு விவாதமுமின்றி 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது.

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது.

இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் மக்களவை எம்பிக்கள் சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களின் இருக்கையை முற்றுகையிட்டும், முழக்கத்தையும் எழுப்பி வந்தனர். இதன்காரணமாக, நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, 12 மணிக்கு பின் மீண்டும் தொடங்கிய மக்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை எம்பிக்கள் ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை  மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தற்போது மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் இரு அவைகளிலும் வேளாண் சட்டம் ரத்து மசோதா நிறைவேற்றபட்டுள்ள நிலையில், இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக  வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்க்கு வெளியே பேட்டியளித்த ராகுல் காந்தி அவர்கள், நாங்கள் முன்பே கூறியபடி, மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது. ஆனால் எந்தவொரு விவாதமுமின்றி 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து விவாதிக்க மத்திய பாஜக அரசு பயப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஓராண்டு ஆனது ஏன்? 700 விவசாயிகள் உயிரிழப்பிற்கு பிறகு தான் வேளாண் சட்டங்களை ரத்து செய்யதிருக்க வேண்டுமா? விவசாயிகள் மரணம், வேளாண் சட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை? இந்த விவகாரத்தில் விவசாயிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மக்களின் பலத்தை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. வரவிருக்கும் சில மாநிலத் தேர்தல்களை மனதில் வைத்தே தற்போது சட்டங்களை ரத்து செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

நெருங்கும் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? விவரம் இதோ!

நெருங்கும் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? விவரம் இதோ!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக…

4 minutes ago

பரவிவரும் ‘பொன்னுக்கு வீங்கி ‘ அறிகுறிகள் என்ன ?.தடுப்பது எப்படி?

பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…

20 minutes ago

காதலி வைஷ்ணவிவை கரம்பிடிக்கும் சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்! குவியும் வாழ்த்துக்கள்.!

சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த்  மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும்  நாளை திருமணம் நடைபெறுகிறது. சென்னை…

29 minutes ago

ராமதாஸ் – முதல்வர் விவகாரம் : பதில் சொல்ல மறுத்த விசிக தலைவர் திருமாவளவன்!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு…

43 minutes ago

“டீம்னா எல்லாருமே தான் டா” விடுதலை மேடையில் கடுப்பாகி கிளம்பிய வெற்றிமாறன்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…

1 hour ago

மழை அப்டேட்: இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…

2 hours ago