சென்னை: அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நான் தாக்கப்பட்டது உண்மை என்றும், அப்போது யாரும் எனக்காக உதவ முன்வரவில்லை என்றும் ஸ்வாதி மலிவால் ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
டெல்லி முன்னாள் மாநில மகளிர் ஆணைய தலைவியும், ஆம் ஆத்மி கட்சி ராஜ்ய சபா எம்.பியுமான ஸ்வாதி மலிவால் கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டார் என டெல்லி காவல்துறையில் புகார் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த புகாரில் ஸ்வாதி மலிவாலிடம் விசாரணை நடத்திய டெல்லி போலீசார் கடந்த மே 19ஆம் தேதி பிபவ் குமாரை கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்த ஸ்வாதி மலிவால் இன்று ANI செய்தி நிறுவனத்திடம் விரிவான பேட்டியை அளித்தார்.
அப்போது அந்த பேட்டியில் மே 13ஆம் தேதி நடந்த சம்பவம் பற்றி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க முதல்வர் இல்லத்துக்கு மே 13இல் சென்றிருந்தேன். ஊழியர்கள் என்னை டிராயிங் ரூமில் காத்திருக்கச் சொன்னார்கள். முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் இருப்பதாகவும், அவர் என்னைச் சந்திக்க வருவதாகவும் சொன்னார்கள். இதற்கிடையில், அவரது உதவியாளர் பிபவ் குமார் வந்தார். என்னைத் திட்டிய அவர், என்னை 7-8 முறை அறைந்தார். நான் காவல்துறையை அழைத்தேன். உடனே அவர் வெளியே சென்று செக்யூரிட்டியை அழைத்தார். அதன் பிறகு வெளியான 50 வினாடிகள் கொண்ட வீடியோதான் இணையத்தில் வைரலானது, ஆனால் உண்மையான ஆதாரங்களை அவர்கள் சிதைத்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் டிராயிங் ரூமில் நான் தாக்கப்பட்டது உண்மை. நான் புகார் அளித்த தருணத்தில், ஒட்டுமொத்தக் கட்சியும் (ஆம் ஆத்மி) எனக்கு எதிராக திரும்பியது. மீண்டும் மீண்டும் எனது குணத்தை குறைகூறி அவமானப்படுத்தினார்கள். எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் ஊடகங்களில் கசிந்தன. சிசிடிவி காட்சிகள் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. ‘112’க்கு போன் செய்தபோது வலி மற்றும் அதிர்ச்சியில் இருந்தேன். அவர் (பிபவ் குமார்) என்னை மீண்டும் தாக்கக்கூடும் என்று அப்போது நினைத்தேன். தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. அதற்க்கு நான் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என மே 13அன்று நடந்த சம்பவம் பற்றி ஸ்வாதி மலிவால் ANI நேர்காணலில் பேட்டியளித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…