புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துவது தான் மத்திய அரசின் பொறுப்பாகும்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 1.50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக பல இடங்களில் தங்கி வேலை பார்த்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புலம்பெயர தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், ‘புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துவது தான் மத்திய அரசின் பொறுப்பாகும். ஆனால் தேவையான உதவி செய்யாமல், கொரோனா பரப்புவதாக மக்களை மத்திய அரசு குறை கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…