“இது கொள்ளையடிப்பதற்கு சமம்” – காங்.மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

Published by
Edison

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாகவும்,இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம் குறையும் என்றும்,அனைத்து மாநில அரசுகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.

அந்த வகையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல, கேரளா,புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களும் பெட்ரோல்,டீசல் விலையை குறைத்து வருகின்றன.

இந்நிலையில்,பெட்ரோல்,டீசல் விலையை ஏற்றி விட்டு பின்பு குறைப்பது கொள்ளையடிப்பதற்கு சமம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

“2 மாதங்களில் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்திவிட்டு,தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாயும் குறைப்பது கொள்ளையடிப்பதற்கு சமம்.மேலும்,மாநிலங்களுக்கு மத்திய நிதிஅமைச்சரின் அறிவுரை அர்த்தமற்றது.மத்திய கலால் வரியை ஒரு ரூபாய் குறைக்கும் போது,அந்த ரூபாயில் 41 பைசா மாநிலங்களுக்கு சொந்தமானது.

எனவே,பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியை (மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத தொகையை) மத்திய அரசு குறைப்பதுதான் உண்மையான விலை குறைப்பு”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

3 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

3 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

4 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

5 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

6 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

6 hours ago