பீகார்,சிறுவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.960 கோடி தொகை நடிகர் சோனு சூட்டுடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பீகார்,கதிஹார் மாவட்டத்தில் உள்ள பாகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தில் வசிக்கும் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகிய சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகை ரூ. 900 கோடிக்கு மேல் இருக்கும் என்று முன்னதாக லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்தது.
அதன்படி,செப்டம்பர் 15 அன்று இரண்டு சிறுவர்களும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) உள்ளூர் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்திற்கு (CPC) சென்று, அரசு சீருடைகளுக்காக மாநில அரசால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைப் பற்றி அறிந்து கொள்ள முயன்றபோது,தங்களது வங்கிக் கணக்கில் பெரும் தொகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவர்கள் உத்தர பீகார் கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள்.விஸ்வாஸின் கணக்கில் ரூ. 60 கோடியும், குமாரின் கணக்கில் திடீரென ரூ. 900 கோடியும் இருந்தது என்று லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்தது.
இதனையடுத்து,கிளை மேலாளர் மனோஜ் குப்தா இந்த விவகாரத்தை அறிந்து ஆச்சரியப்பட்டு பணம் எடுப்பதை நிறுத்தினார்.அதன்பின்னர்,ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதே நேரத்தில்,மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட்டின் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில்,சிறுவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை நடிகர் சோனு சூட்டுடையதாக இருக்கலாம் என்ற மும்பை போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.காரணம்,சிறுவர்களின் வங்கி கணக்குக்கு ஸ்பைஸ் மனி நிறுவனத்தில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில்,நடிகர் சோனு சூட் இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.இந்த நிறுவனத்தில் சோனு சூட்டுக்கு பெரிய பங்கு உள்ளது. எனினும்,சிறுவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட இந்தப் பணம் நடிகர் சோனு சூட் தொடர்புடையது என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.இதனைத் தொடர்ந்து,இரு மாணவர்களின் கணக்குகளில் இந்த திடீர் பரிவர்த்தனையில்,வங்கி மேலாளர் எம்.கே.மதுக்கரால் கொடுத்த புகாரின் அடிப்படியில் சைபர் கிரைம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து,இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மும்பை மாவட்ட நீதிபதி உதயன் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…