மத்திய அரசு புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வருத்தமளிக்கிறது-முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் இரண்டாவது நாளாக இன்று
நடைபெற்றது.இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய அரசு புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வருத்தமளிக்கிறது, ஆனாலும் மாநில அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் .
நீட், நெக்ஸ்ட் தேர்வுகளில் இருந்து விலக்கு, இரு மொழிக்கொள்கையை கடைபிடிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானங்கள் புதுச்சேரி பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது . புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் என்று பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.