கங்கையாற்றின் நீரின் தரம் 50 விழுக்காடு மேம்பட்டுள்ளதாக தகவல்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர கடந்த 25 -ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக் உள்ளனர்.இதனால் பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
வாகன போக்குவரத்து இல்லாமல் காற்று மாசு பெருமளவு குறைந்து உள்ளது. இந்நிலையில் கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு இருந்து கழிவுகள் வெளியேறி கலப்பது நின்றுபோனது.
இதனால் கான்பூரில் கங்கையாற்று நீரின் தரம் முன்பைவிட 50 விழுக்காடு அளவுக்கு மேம்பட்டுள்ளதாக வாரணாசி ஐஐடியின் பேராசிரியர் பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.