செப்டம்பர் 26 ஆம் தேதி ஐ.நா சபையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்.!
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி ஐ.நா சபையில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐநா.சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அதன் பொதுச்சபை கூட்டம், கொரோனா பரவல் காரணமாக காணொளி மூலம் நடைபெறுகிறது. ஐ.நா சபை மற்றும் மாநாட்டு மேலாண்மை திணைக்களம் பொது விவாதத்திற்கான பேச்சாளர்களின் தற்காலிக பட்டியலை நேற்று வெளியிட்டது.
அந்த பட்டியலின் படி, செப்டம்பர் 26 ஆம் தேதி காலை பொது விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பட்டியல் தற்காலிகமானது என்றும் அடுத்த இரண்டு வாரத்தில் பொது விவாதத்திற்கான அட்டவணைகள் மற்றும் பேச்சாளர்கள் மாறக்கூடும் எனவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.