நீரவ் மோடி விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார்.! இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி.!
நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி தொடர்ந்த அத்தனை வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, தனது வியாபாரத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 11,500 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி ஓடிவிட்டார்.
அதன் பிறகு, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்தியா முயற்சி செய்து வருகிறது .
இதனை எதிர்த்து நீரவ் மோடி இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்ததால் நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி தாமதமாகி கொண்டு இருந்தது.
இந்நிலையில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி தொடர்ந்த அத்தனை வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீரவ் மோடியின் ஜமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவர் இன்னும் இங்கிலாந்து சிறையில் இருக்கிறார். இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தபட அதிக வாய்ப்பு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.