நாம் பிரச்சினைகளை சந்தித்தாலும் பரவாயில்லை , சீனர்களை நுழையவிடக்கூடாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில் அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதனால் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், சீனா சர்வாதிகார நாடாகும்.இதனால் தான் விரும்பியதை எல்லாம் செய்ய முயற்சி செய்யும் . இதற்கு இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும்.குறிப்பாக உள்கட்டமைப்பு துறைகளில் சீன நிறுவனங்களை நுழைய விடக்கூடாது.மேலும் சிவில் விமான போக்குவரத்து.ரயில்வே,தொலைத்தொடர்பு உள்ளிட்டவற்றிலும் சீன நிறுவனங்களை நுழையவிடக்கூடாது.இதனால் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்களை நுழைய விடக்கூடாது என்று பேசினார்.
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…