இனிமேல் இந்த மாநிலத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயம்…!

கர்நாடக மாநிலத்திலும் தினசரி தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், போக்குவரத்தின் போதும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அப்படி, தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், டெல்லி, ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திலும் தினசரி தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், போக்குவரத்தின் போதும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், தனிநபர்கள் பொது இடங்களில் குறைந்தபட்சம் 2 அடி இடைவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025