மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

Sunil Chhetri

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கூறியுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நேற்று புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

போலீசார் வைத்திருந்த தடுப்புகளைத் தாண்டி, மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி செல்ல முயன்றபோது மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின், மல்யுத்த வீரர் சக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உட்பட மல்யுத்த வீரர்கள் சிலரை போலீசார் பலவந்தமாக கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

இதற்கு பல கட்சித்தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதைக் குறித்து விவாதித்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, நம் நாட்டிற்காக பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது ஏன்.? இது யாரையும் நடத்துவதற்கான முறை இதுவல்ல என்று ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்