வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
வங்கிக் கடன்களுக்கு வட்டி வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது.
அதில், கொரோனா பொதுமுடக்க காலத்தில் இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களின் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறையை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்த குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் வட்டிக்கு வட்டி செலுத்தி இருந்தால் அதை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்து ரிசர்வ் வங்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறையை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளையில் முறையாக கடனை திருப்பி செலுத்தாதவர்களின் சொத்துக்களை முடக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க ரிசர்வ் வங்கி கோரிக்கை வைத்துள்ளது. இந்த தடையை உடனடியாக நீக்க படாவிட்டால் வங்கிதுறையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று கூறி உள்ளது. கடன் தவணை சலுகையை காலத்தை நீட்டிப்பது வங்கிகளின் பணப்புழக்கத்தை குறைத்துவிடும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடன் தவணை நீட்டித்தால் கடன் பெறுபவருக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…