கொரோனா பாதிப்பை தொடர்ந்து மார்ச் 24 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு அடுத்து ஏப்ரல் 14 , மே 3 தேதி என மூன்று கட்டமாக மத்திய அரசு அறிவித்தது . இது வருகிறது 17 ம் தேதியுடன் முடிவடைகிறது .ஊரடங்கு தொடங்கியது முதல் அணைத்து போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது .
இந்நிலையில் இன்றுமுதல் ரயில் போக்குவரத்து 15 நகரங்களுக்கு டெல்லியிலிருந்து தொடங்குகிறது என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்தது .இதற்கான முன்பதிவு நேற்று முதல் ரயில்வே இணையதளத்தில் தொடங்கியது .
கேரளாவிற்கு சிறப்பு ரயில்களில் வருபவர்கள் கோவிட் -19 ஜாக்ரதா ( https://covid19jagratha.kerala.nic.in/ ) என்ற இணையதளத்தில் டிஜிட்டல் பாஸுக்கு விண்ணப்பிக்க கேரளா கட்டாயமாக்கியுள்ளது. டிஜிட்டல் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள், மற்றவர்கள் 14 நாட்கள் அரசு அனுமதித்துள்ள இடத்தில் மட்டும் தங்க வேண்டியிருக்கும் என்றும் கேரளாவில் பயணிகள் உடல்நிலை சரியாக உள்ளதா என்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.
ரயிலில் பயணிப்போர் கட்டாயமாக ஆரோக்யா சேது செயலியின் பயன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…