கேரளாவுக்கு போகணுமா இது முக்கியம் ” பாஸ் ” இருந்தால் மட்டுமே அனுமதி

Default Image

கொரோனா பாதிப்பை தொடர்ந்து மார்ச் 24 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு அடுத்து ஏப்ரல் 14 , மே 3 தேதி என மூன்று கட்டமாக  மத்திய அரசு அறிவித்தது . இது வருகிறது 17 ம் தேதியுடன் முடிவடைகிறது .ஊரடங்கு தொடங்கியது முதல் அணைத்து போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது .

இந்நிலையில் இன்றுமுதல்  ரயில் போக்குவரத்து 15 நகரங்களுக்கு டெல்லியிலிருந்து தொடங்குகிறது என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்தது .இதற்கான முன்பதிவு நேற்று முதல் ரயில்வே இணையதளத்தில் தொடங்கியது .

கேரளாவிற்கு  சிறப்பு ரயில்களில் வருபவர்கள் கோவிட் -19 ஜாக்ரதா ( https://covid19jagratha.kerala.nic.in/ ) என்ற இணையதளத்தில் டிஜிட்டல் பாஸுக்கு விண்ணப்பிக்க கேரளா கட்டாயமாக்கியுள்ளது. டிஜிட்டல் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள், மற்றவர்கள் 14 நாட்கள் அரசு அனுமதித்துள்ள இடத்தில் மட்டும் தங்க வேண்டியிருக்கும் என்றும் கேரளாவில் பயணிகள் உடல்நிலை சரியாக உள்ளதா என்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.

ரயிலில் பயணிப்போர் கட்டாயமாக ஆரோக்யா சேது செயலியின் பயன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்