குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினம் – ரத்தன் டாடா

இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினமான விஷயம் ஆகும் என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
கட்டுமானம் மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக காணொலி காட்சி மூலம் மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா பேசினார்.அவர் பேசுகையில் ,இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினமான விஷயம் ஆகும். குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுத்தாலும் வேறு இடத்தில் புதிதாக குடிசைப்பகுதி உருவாகுகிறது.
ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.இதற்கு சிறந்த தீர்வு கொள்கைகளை மறு சீரமைப்பு செய்வதே ஆகும். இந்தியாவில் உள்ள நகரங்களில் குடிசை பகுதிகள் இருப்பதை நினைத்து கட்டடக் கலைஞர்கள் வெட்கப்படவேண்டும்.சவால்களை ஏற்றுக்கொண்டு புதிய இந்தியாவின் அங்கமாக குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!
March 31, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025