பாஜகவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட உயிரை விடுவதே மேல்- நிதிஷ் குமார்.!

Default Image

பாரதிய ஜனதாவுடன் இந்த ஜென்மத்தில் மீண்டும் கூட்டணி வைக்கும் எண்ணமில்லை என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாரதிய ஜனதாவுடன் தனது வாழ்நாளில் மீண்டும் கூட்டணி வைக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். சாகும் வரை இனி பாஜகவுடன் இணைய மாட்டேன், மரணத்தை ஏற்றுக்கொள்வேன் ஆனால் பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டேன் என்று முதல்வர் நிதிஷ் குமார் கூறினார். தனக்கு முதல்வர் ஆகும் எண்ணம் இருந்ததில்லை என்றும், பாஜக தான் தன்னை வலுக்கட்டாயமாக முதல்வராக்கியது என்றும் அவர் கூறினார். தேர்தல் நடக்கட்டும், யார் எத்தனை இடங்கள் வெல்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிய வரும்.

பாஜகவின் தற்போதைய தலைமையை கடுமையாக சாடிய நிதிஷ் குமார், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானியின் தலைமையிலான பாஜக ஆட்சியை நினைவு கூர்ந்து பேசினார். நாங்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானியை மதிப்போம், எனவே அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தோம் என்று அவர் மேலும் கூறினார். முன்னதாக, பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், கூறும்போது முதல்வர் நிதிஷ் குமாருடன் மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை என கூறினார்.

நிதீஷ் குமார், தனது செல்வாக்கை இழந்து வருகிறார். அவரது செல்வாக்கின்மையால் 2020 சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சி பல இடங்களில் தோல்வியடைந்தது, இருந்தும் பாஜக மாநிலத்தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டது என்று ஜெய்ஸ்வால் மேலும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்