நான் கையில் வைத்திருந்த கருவி என்ன தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்
நான் கையில் வைத்திருந்த கருவியின் பெயர் அக்குபிரஷர் ரோலர்( acupressure roller) என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி -சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. பின்னர் அங்கு உள்ள சிற்பங்களை இருவரும் பார்வையிட்டனர்.நேற்று கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியிருந்தார்.
அப்பொழுது நேற்று காலை பிரதமர் மோடி நடை பயிற்சியில் ஈடுபட்ட போது காலில் செருப்பு அணியாமல் கடற்கரையில் கிடந்த குப்பைகளை தனது கையால் குப்பைகைளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார். மேலும் கடற்கரையில் நடைபயிற்சியும் மேற்கொண்டார்.அந்த சமயத்தில் அவரது கையில் ஒன்றை வைத்திருந்தார்.அது என்ன என்று அனைவரின் மத்தியிலும் கேள்வி எழுந்து வந்தது.இந்த நிலையில் அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பதிலில், நேற்று முதல் பலரும் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு வருகிறார்கள். நான் மாமல்லபுர கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கையில் வைத்திருந்த கருவி என்ன என்பதுதான் அந்த கேள்வி. அந்தப் கருவியின் பெயர் அக்குபிரஷர் ரோலர்( acupressure roller) அது எனக்கு மிகவும் உதவியாக உள்ள கருவி என்று பதிவிட்டுள்ளார்.