16-வது பிரசவத்தின் போது தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு.
மத்தியபிரதேசம் மாநிலம், தாமோ மாவட்டத்தின் பதாஹிர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரானி (45). இவருக்கு 15 குழந்தைகளை பெற்றேடுத்த நிலையில், 4 ஆண்குழந்தையும், 4 பெண் குழந்தையும் மட்டுமே உயிருடன் உள்ளனர். மீதம் 7 குழந்தைகளும் பிறந்து சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்களில் இறந்துவிட்டனர்.
இந்நிலையில், இப்பெண் தனது 16-வது பிரசவத்திற்காக, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தை பிறந்து சில மணி நேரத்திலேயே, தாயும், சேயும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தாயும், சேயும் இறந்துவிட்டதாக, அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்பெண் ஊழியர் கூறுகையில், ‘பிரசவத்தின் போது அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட மோசமான உடல்நிலையால் சோர்வுற்று இருந்தார். அதனால், குழந்தையையும், தாயையும் காப்பாற்ற முடியவில்லை. அப்பெண் 16-வது முறையாக தாயாகி தற்போது இறந்துவிட்டார்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…