வயலில் மாடு மேய்ந்தது குற்றமாம்..! பட்டியலினப் பெண்ணை தாக்கிய நபர் கைது..!
கர்நாடகாவில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரின் வயலில் பசு மாடு தவறி சென்றதால் பட்டியலினப் பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்தவரின் வயலில் பசு மாடு தவறி சென்றதால் பட்டியலின பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொப்பல் மாவட்டத்தில் ஷோபாம்மா ஹரிஜன் என்ற பெண்ணின் மாடு, அம்ரிஷ் கும்பார் என்பவரின் வயல்களில் வழிதவறிச் சென்றுள்ளது.
இதனைக் கண்ட மாட்டின் உரிமையாளரான ஹரிஜன் அதை வீட்டிற்கு கொண்டு வருவதற்காக அவரது இடத்திற்குள் சென்றுள்ளார். பட்டியலினப் பெண் தனது இடத்திற்குள் வந்ததை கண்ட அவர் ஹரிஜனை செல்லவிடாமல் தடுத்து தாக்கியுள்ளார்.
அந்த பெண் தன்னை தாக்குவதை நிறுத்துமாறு கெஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அம்ரிஷ் கும்பாரை கைது செய்தனர்.
Trigger Warning ⚠️ Sensitive Content pic.twitter.com/pkeHudPCXE
— The Dalit Voice (@ambedkariteIND) February 9, 2023