வழக்கு வேண்டாம்?! பின்வாங்கியதா??கேரளா!கிசுகிசுக்கும் அரசியல்களம்
ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக கேரள அரசு வழக்கு தொடர திட்டமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர திட்டமிட்ட நிலையில் வழக்கு தொடரபோதில்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களுக்கான இழப்பீடு தொகைக்கு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கச் சொல்லும் ஜி.எஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க கேரள அரசு திட்டமிட்டது.
மேலும் இது குறித்து தக்க சட்ட ஆலோசகர்களுடன் நேற்று ஆலோசனை நடக்க இருந்தே கூட்டமே திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
மாநிலங்கள் சார்பாக ரிசர்வ் வங்கியின் சிறப்பு சாளரம் வழியாக
1லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபார் கடன் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் அரசுடன் கவன் வாங்கக்கூறிய ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த 7 மாநிலங்களில் ஒரு சில மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் கேரள அரசும் தனது முடிவில் பின்வாங்கியதாக? கூறப்படுகிறது.