இந்த 9 துறைகள் எங்களுக்கு தான்… பாஜக உறுதி.? JDU, TDP கட்சிகளுக்கு…
டெல்லி: உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 7 மணி அளவில் இந்தியவின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நாளை முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
இப்படியான சூழலில், NDA கூட்டணியில் முக்கிய கட்சிகளாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை முக்கிய துறைகளை கேட்பதாகவும் அவ்வப்போது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனை தொடர்ந்து தபோது தனியார் செய்தி நிறுவனத்தில் வெளியான தகவலின்படி, NDA கூட்டணியில் தலைமை வகிக்கும் பாஜக, உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை, ரயில்வேத் துறை, சாலைப் போக்குவரத்து, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, கல்வித்துறை ஆகிய 9 துறைகளை தன்வசப்படுத்த வாய்ப்புள்ளது என்றும்,
கூட்டணி கட்சிகள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக கிட்டத்தட்ட 12 முதல் 15 பதவிகளை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. பீகார் பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் JDU கட்சிகளுக்கு சம எண்ணிக்கையில் அமைச்சரவை பொறுப்புகள் கிடைக்கும் என்றும், சந்திரபாபு நாயுடுவின் TDP கட்சிக்கு 3 அமைச்சரவை பொறுப்புகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
புதியதாக அமையவுள்ள 18வது அமைச்சரவையில் யார் யார் எந்த இடம்பெற்றுள்ளனர், எந்த கட்சிகளுக்கு எந்தெந்த துறைகள் என்ற விவரம் நாளை மாலை அதிகாரபூர்வமாக கிடைக்கப்பெறும் என்று அறியப்படுகிறது.