கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா.. துணை முதல்வராக டி.கே.சிவகுமார்.?
கர்நாடக முதல்வராக சித்தராமையாயும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையிலும், கடந்த 5 நாட்களாக புதிய முதல்வர் யார் என காங்கிரஸ் தலைமை அறிவிக்காமல் இருந்து வந்தது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதில் சித்தராமையாவா.? டி.கே.சிவகுமாரா.? யார் கர்நாடக முதல்வர் என்று ஆலோசனையில், தற்போது முடிவு கிடைத்துள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புதிய முதல்வராக ஏற்கனவே முதல்வர் பதவியில் இருந்த சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மே 20ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.