பிரிக்ஸ் உச்சி மாநாடு…உச்சி விவாகரம் பற்றி பேசப்படுமா?
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன
நடப்பாண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நவ.,17ந்தேதி நடக்க உள்ளது.இம்மாநாடானது காணோலி வாயிலாக நடக்கிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் 18 முறைக்கு மேலாக சந்தித்துள்ள இருநாட்டு தலைவர்களும் லடாக் பிரச்சனைக்கு பிறகு ஒருமுறைக் கூட சந்திக்கவில்லை.இந்நிலையில் நவ.,17க்கு முன் லடாக் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.